search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீதாராம் யெச்சூரி"

    • தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள் - மோடி
    • அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது - மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    மோடியின் பேச்சு தேர்தல் ஆணையத்துக்கு கேட்காதா? வெறுப்புணர்வை தூண்டும் மோடியின் பேச்சு தேர்தல் நடத்தை விதியை மீறும் செயல். வெறுப்புணர்வுக்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. கடும் நடவடிக்கையும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுக்கப்பட வேண்டும். இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது.
    • பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

    சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

    அதில், பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

    இந்நிலையில் புதிய தேர்தல் ஆணைய நியமனம் தொடர்பாக சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், பதிவொன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "சுக்பீர் சந்துவையும் ஞானேஷ் குமாரையும் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர்களாக நியமித்திருக்கிறார் மோடி. ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை உருவாக்க முக்கியப் பங்காற்றியவர் ஞானேஷ் குமார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது உள்துறை அமைச்சகத்தின் ஜம்மு காஷ்மீர் பிரிவுக்காக அமித் ஷாவுக்குக் கீழ் பணியாற்றியவர் என்று தெரிவித்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அவர்களும் இதை விமர்சித்துள்ளார். அதில்,

    பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில் இருந்து, தலைமை நீதிபதியை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவர் இடம் பெறுவார் என்று மோடி அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளது எனக்கூறி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்பே புதிய தேர்தல் ஆணையர்களை மோடி நியமித்துள்ளார். புதிய தேர்தல் ஆணையர் பதவிகளில் பட்டியலிடப்பட்ட 6 பெயர்களில் 2 பேர் பத்தே நிமிடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    • இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

    கொல்கத்தா :

    அதானி குழுமம் பங்குச்சந்தைகளில் மோசடி செய்ததாகவும், கணக்கில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற முதலீ்ட்டு ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. இதைத்தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையான சரிவை சந்தித்தன. குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

    இந்தநிலையில், இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசு உயர்மட்ட விசாரணை குழுவை அமைக்க வேண்டும். அதில், சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்.

    அந்த விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். விசாரணை முடிவடையும்வரை, அன்றாட அடிப்படையில் கண்காணிக்க வேண்டும். நாட்டின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில், மத்திய நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் சம்பந்தப்பட்டுள்ளன. அனைத்து குற்றச்சாட்டுகளும் முறையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    ஐதராபாத் :

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

    அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
    • யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.

    நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.

    இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.

    2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×